Friday, September 27, 2013

தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு!

Friday, September 27, 2013
இலங்கை::தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் அமைப்புடன் இணைந்து தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 
இது தொடர்பில் நேற்றைய தினமும் இன்றைய தினமும் வவுனியாவில் வட்டமேசை மாநாடு நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நல்லிணகத்தை ஏற்படுத்துவதற்கு மனித உரிமை ஆணைக்குழு எவ்வாறு பங்களிப்பு செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
சிவில் அமைப்புக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இந்த வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். வட அயர்லாந்து மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதித் தலைவர் டொக்டர் டேவிட் ரசல், வட அயர்லாந்தின் நல்லிணக்க அமைப்பிற்கான பிரதம நிறைவேற்று அதிகாரி மைக்கல் தோர்த்தீ ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
 
 

No comments:

Post a Comment