Friday, September 27, 2013
இலங்கை::கென்யாவில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலகள் சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பங்களிப்பை வலியுறுத்தி நிற்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கென்யாவின் நைரோபியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளி;ட்ட 70 பேர் கொல்லப்பட்டனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலவைர்கள் அமர்வுகளில் கென்யாவும் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது. எல்லைதாண்டிய பயங்கரவாத ஒழிப்பு தொடர்பிலான சர்வதேச பங்களிப்பு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இம்முறை பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பயங்கரவா ஒழிப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு மேற்குலக நாடுகளுக்கு சென்று தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குறித்த நாடுகள் ஒத்துழைப்பு வழங்கத் தவறியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:
Post a Comment