Friday, September 27, 2013
இலங்கை::யாழ்.குடாநாட்டிற்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு இரு இந்திய ராஜதந்திரிகள் வந்தடைந்துள்ளனர்.
நேற்றுப் புதன்கிழமை மதியம் இலங்கை விமானப்படை விமானம் மூலம் பலாலியை வந்தடைந்த பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதுவராலய அதிகாரிகள் வரவேற்றனர். முதலில் நல்லூரிலுள்ள இந்திய துணைதூதுவராலயத்திற்கு விஜயம் செய்த பிரதிநிதிகள் அங்கு பேச்சுக்களை நடத்தினர்.
பின்னர் யாழ்.புகையிரத நிலையத்திற்கு விஜயம் குழுவினர் அதனை பார்வையிட்டுள்ளதுடன் வேறும் சில இடங்களிற்கும் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கான இப்பிரதிநிதிகளது பயணம் மிக இரகசியமானதாக கூறப்படுகின்றது.எனினும் வருகை தந்த பிரதிநிதிகள் குழு பற்றிய மேலதிக விபரங்களை வெளியிட இந்திய துணைதூதுவரலாய வட்டாரங்கள் மறுத்துள்ளன.

No comments:
Post a Comment