Friday, September 27, 2013

மீண்டும் ஒரு யுத்தம் அவசியம் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு!

Friday, September 27, 2013
இலங்கை::மீண்டும் ஒரு யுத்தம் அவசியம் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று  டிவியில் இடம்பெற்ற பலய நிகழ்ச்சியில் உரையாற்றும் போது, இதனைத தெரிவித்துள்ளார்.

மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்பட போவது தமிழர்களாகவே இருக்கும்.

யுத்தமோ, வன்முறைகளோ நாட்டுக்கு உகந்தது இல்லை.

தற்போது சிறந்த வாழ்வியல் சூழல் ஏற்பட்டுள்ளது.

வடக்கில் ஜனநாயக நிலைமை வளர்ச்சி அடைந்து வருகிறது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதனையே தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக் கொள்கிறது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு மோதலை தமிழ் தேசிய கூட்டமைப்பு அனுமதிக்காது என்று அவர் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment