Friday, September 27, 2013
இலங்கை::வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் கிழக்கின் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிள்ளையான் கோரியுள்ளார். வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றமை குறித்து கருத்துத் தெரிவித்த பிள்ளையான்

எந்த அரசியல் கட்சி வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றிக் கொண்டிருந்தாலும் அது பிரச்சினை அல்ல. ஆனால் அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் அந்த மாகாண சபைக்குரிய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்ததைவிட பெரும் வெற்றியொன்றை மக்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாண சபையொன்றுக்கு வழங்க முடியாத அதிகாரங்கள் குறித்த யோசனைகள் அதிகமாக உள்ளடங்கியுள்ளன.மாகாண சபையின் மூலமாக நிறைவேற்ற இயலாத விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்விதம் நிறைவேற்றப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கவுள்ளதாகவும் பிள்ளையான் தெரிவித்தார்.
வடக்கின் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வரவேற்றாலும் கிழக்கு மாகாண சபை வெவ்வேறு இனங்களைக் கொண்டிருப்பதால் இங்கு பொதுத்தேர்தல் ஒன்றின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி என்பது சிரமத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment