Monday, September 09, 2013
சென்னை::தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவதை, மத்திய அரசு வேடிக்கை பார்க்காது என்று மத்
திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார். மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் ஜோலார்பேட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கை மீனவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை மத்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து ஐ.நா சபையில் இந்திய தூதர் 2 முறை கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.
தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. இலங்கை அரசிடம் இந்திய தூதர் பேச்சு நடத்துவார். மீறி இச்சம்பவம் தொடர்ந்து நடந்தால் மத்திய அரசு தலையிட்டு பிரச்னைக்கு தீர்வுகாணும். இலங்கை மீனவர்கள் அத்துமீறி தமிழக கடல் எல்லைக்குள் நுழைந்து அவர்கள் மீன் பிடிப்பதை இந்திய அரசு அவர்களை பெருந்தன்மையுடன் மன்னிக்கிறது.

அவர்களை போல் மீனவர்களை தாக்கும் தீய செயலை செய்யவில்லை. மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் மிக பெரிய வெற்றி கூட்டணி அமைக்கும். தமிழகத்தில் யார், யாருடன் கூட்டு என்பதை ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமை முடிவெடுக்கும். இவ்வாறு வாசன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment