Monday, September 09, 2013
மதுரை::தமிழக மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண, கச்சத்தீவை
மீட்பதே வழி' என, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர் ஐக்கிய முன்னணி, தீர்மானம்
நிறைவேற்றியது.மதுரையில், மீனவர் ஐக்கிய முன்னணி முதல் மாநில பொதுக்குழு கூட்டம்,
மாநிலத் தலைவர் அப்பாராஜ் தலைமையில் நடந்தது. பொதுச் செயலர் மைக்கேல் பெர்னாண்டோ
பேசினார்.
தமிழக மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்; மீனவர்களுக்கு
வழங்கப்படும் டீசலுக்கு, 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்; இலங்கை கடற்படையினரால்
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்; கச்சத்தீவை
மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டிற்கு
பிரதமர் மன்மோகன் சிங் செல்லக்கூடாது என, இக்கூட்டத்தில்
வலியுறுத்தப்பட்டது.

No comments:
Post a Comment