Monday, September 9, 2013

வட பகுதியிலுள்ள மக்கள் நிம்மதியான வாழ்க்கையையே எதிர்பார்க்கின்றனர். 13வது திருத்தத்தையோ அல்லது வேறு எந்தவொரு திருத்தத்தையோ அவர்கள் எதிர்பார்க் கவில்லை: கீதாஞ்சலி நகுலேஸ்வரன்!

Monday, September 09, 2013
இலங்கை::வட பகுதியிலுள்ள மக்கள் நிம்மதியான வாழ்க்கையையே எதிர்பார்க்கின்றனர். 13வது திருத்தத்தையோ அல்லது வேறு எந்தவொரு திருத்தத் தையோ அவர்கள் எதிர்பார்க் கவில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார்.
 
சில தமிழ் அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபத்துக்காக 13வது திருத்தம் போன்ற விட யங்களைக் கதைத்து பிரசாரம் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையம் கொழும் பில் ஏற்பாடு செய்திருந்த ‘13வது திருத்தம் தொடர்பான வடக்கு, கிழக்கு மக்களின் குரல்’ எனும் தலைப்பிலான குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கீதாஞ்சலி நகுலேஸ்வரன் இவ்வாறு கூறினார்.
 
இக்குழு விவாதத்துக்கு சட்டத்தரணி ஆர்.சி.கருணாகரன் நடுவராகச் செயற் பட்டதுடன், ஏறாவூர் நகரபிதா அலிசாஹிர் மெளலானா, சுதந்திரக் கட்சியின் மட்டக் களப்பு அமைப்பாளர் அருண் தம்பிமுத்து, பட்டிருப்பு அமைப்பாளர் சாணக்கியன் ராசமாணிக்கம், டொக்டர் சிவபாலன், சமூக சேவையாளர் சண்முகநாதன் ஆகி யோர் தமது கருத்துக்களை வெளியிட்டிருந் தனர். சர்வதேச கற்கைகளுக்கான பண் டாரநாயக்க நிலையத்தின் தலைவர் சுனிமல் பெர்னான்டோ, பணிப்பாளர் லின் ஒக்கேர்ஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
 
இங்கு தொடர்ந்தும் கருத்துரைத்த கீதாஞ்சலி நகுலேஸ்வரன், நிம்மதியான வாழ்க்கையொன்றை வாழ வேண்டும் என்பதே வடபகுதி மக்களின் குரலாக உள்ளது. 13வது திருத்தத்தையோ அல்லது வேறு ஒரு திருத்தத்தையோ மக்கள் எதிர்பார்க்கவில்லை. தற்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கும் சமாதானச் சூழல் தொடர்ந்தும் நிலைக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர்.
டந்த கால யுத்தத்திலிருந்து மீண்டு சாதாரண வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் மக்களுக்கு ஏனைய மாகாணங்களைப் போன்று சகல உரிமைகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. சுதந்திரமாக வாக்களிக்கும் சந்தர்ப்பமும் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
 
வடபகுதி மக்கள் காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கோரவில்லை. மீள்குடியமர்ந்த மக்களுக்கு காணிகளை அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது. வடக்கைச் சேர்ந்த பாமர மக்கள் 13வது திருத்தம் பற்றியோ வேறு எதனைப் பற்றியுமோ சிந்திக்கவில்லை. சுயநலம் கொண்ட அரசியல் தலைவர்களே அப்பகுதி மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அவர்களின் உணர்வுகளைக் கிளறி அவற்றின் மூலம் நன்மை அடைவதற்குப் பார்க்கின்றனர் என்றார்.

No comments:

Post a Comment