Monday, September 9, 2013

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிற்கு 99 வீதமான நாடுகள் பங்குபற்ற இணக்கம்: நிமல் சிறிபால டி சில்வா!

Monday, September 09, 2013
இலங்கை::இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிற்கு 99 வீதமான நாடுகள் பங்குபற்ற இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

தாம் நேற்றைய தினம் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பாராளுமன்ற சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பியதாகத் தெரிவித்த அமைச்சர்; அங்கு சர்வதேச நாடுகளிலிருந்து கலந்து கொண்ட அரச பிரதிநிதிகள் இந்த இணக்கப்பாட்டைத் தெரிவித்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எமது நாட்டை அவர்கள் நேசிப்பதாகத் தெரிவித்த அமைச்சர்; பொது நலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் எமது ஜனாதிபதி தலைமைப் பொறுப்பை ஏற்பது நம்மில் பலருக்கு எரிச்சலாக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மத்திய மாகாண சபைக்கான தேர்தல் பிரசாரக் கூட்டம் கண்டி குண்டசாலை மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தலைமையில் நடைபெற்றது. தென்னாபிரிக்காவிலிருந்து வருகை தந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேரடியாகவே விமான நிலையத்திலிருந்து கண்டிக்கு வருகை தந்திருந்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: இக்காலகட்டத்தில் இலங்கையை நிலைகுலையச் செய்வதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அராபிய வசந்தம் என்ற பெயரில் மேற்குலகம் அரபு நாடுகளைத் துண்டாட நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அமெரிக்கா இப்போது சிரியா மீது தாக்குதல் தொடுக்க தயாராகிறது.இந்த நாடுகளில் தம்மை நிலைப்படுத்த மனித உரிமை என்ற பெயரில் தமக்கு விருப்பமான தலைவர்களை நியமிக்க முயற்சிக்கின்றனர். அதற்கு இணங்காத தலைவர்களை அழிக்க முயற்சிக்கின்றனர். நாம் எமது இறைமையைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அதன் மூலமே எமது எதிர்கால பயணத்தை முன்னெடுக்க முடியும். இம்முறை தேர்தல் மூலம் நாம் இதற்கான செய்தியை உலகிற்குத் தெரிவிக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி பொய்க் குற்றச்சாடுக்களை முன்வைக்கிறது. மக்கள் அதனை நம் பத் தயாரில்லை. மக்கள் ஜனாதிபதி மீது அசையாத நம்பிக்கை கொண்டுள் ளனர் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment