Thursday, September 26, 2013

நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்: அவுஸ்திரேலியாவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷொப்!

Thursday, September 26, 2013
மெல்பேர்ண்::நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
 
இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அவுஸ்திரேலியாவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷொப் தெரிவித்துள்ளார்.
 
எனினும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை உலகத் தலைவர்கள் புறக்கணிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் உலக நாடுகள் பங்கேற்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமை விவகாரங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மேம்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த இலங்கைக்கு இந்த அமர்வுகள் சந்தர்ப்பமாக மையம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இலங்கையை தனிமைப்படுத்துவதனை விடவும் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் வரவேற்கப்பட வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment