Thursday, September 26, 2013
இலங்கை::நாட்டின் காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கே உரித்தாவதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
பிரதம நீதியரசரான மொஹான் பீரிஸ், நீதியரசர்களான கே.ஸ்ரீபவன் மற்றும் ஈவா வனசுந்தர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கொன்றின் தீர்ப்பிலேயே உயர்நீதிமன்றம் தனது தீர்மானத்தை அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் தனித்தனியே மூன்று தீர்ப்புகளை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.
நாட்டின் காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திற்கே உரித்தாவதுடன் மாகாண சபைகளிடம் அந்த அதிகாரம் இல்லையென அந்த மூன்று தீர்ப்புகளிலும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்கசுக்கு சொந்தமான காணியொன்றில் இருந்து ஒருவரை வெளியேற்றுவதில் ஏற்பட்டிருந்த தகராறு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கொன்றின் மீதான மேன்முறையீடு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பின்னரே உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்துள்ளது.
அரசியலமைப்பின் 13ஆம் திருத்தச் சட்டத்தின் படி மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்கள் வழங்க முடியாது எனவும் உயர் நீதிமன்றம்


No comments:
Post a Comment