Thursday, September 26, 2013

புலிகளை இலங்கையில் மறுபடியும் செயல் படாவிட்டால் சர்வதேச பழியிலிருந்து இலங்கை தப்பலாம் (புலி)கூட்டமைப்பின் சம்பந்தன்!

Thursday, September 26, 2013
இலங்கை::புலிகளை இலங்கையில் மறுபடியும்  செயல் படாவிட்டால் சர்வதேச பழியிலிருந்து  இலங்கை தப்பலாம் (புலி)கூட்டமைப்பின் சம்பந்தன்!
ஜனநாயக ரீதியில் எமது மக்கள் ஒரு சந்தர்ப்பத்தை அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றனர். எமது மக்களின் உணர்வுபூர்வமான செயற்பாட்டினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நியாயமாக செயற்பட்டால் எமது பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவோம். இந்தச் சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்தி அதன் முடிவினை, நியாயமான அரசியல் தீர்வினை முன்வைக்கும் பட்சத்தில் அரசாங்கம் எதிர்கொண்டிருக்கின்ற சர்வதேச பழியிலிருந்து தப்பிக்க முடியும் என தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒரு ஏமாற்று நடவடிக்கையாகும். அதன் நோக்கம் என்ன என்பதை அமைச்சர்களே கூறியுள்ளனர். அதிகாரங்களை நீக்கவேண்டுமென்றும் 13ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் ஆக்கவேண்டுமென்றும் கூறியுள்ளனர். இவ்விதமான சந்தர்ப்பத்தில் தெரிவுக்குழுவில் இணைவதற்கு நாம் மோடர்களா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்வதேச சமூகம் இலங்கையை குறித்துவைத்துத் தாக்குகின்றது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லை. இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு நீண்டகாலமாக அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது. விசேடமாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவி ஏற்றதன் பின்னர் இந்த நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கின்றது. எனினும், அதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த முன்னேற்றகரமான நிலைமைகள் கூட மாற்றியமைக்கப்பட்டுள்ள அல்லது இல்லாமல் செய்யப்பட்டுள்ள பாரதூரமான நிலையும் உருவாகிவந்துள்ளது. தமிழ் மக்களுடைய எதிர்காலம் சம்பந்தமாகக் கூறுவதாயின் தமிழருக்கு நீதி, நியாயம் வழங்கவேண்டியதன் தேவை சம்பந்தமாக இலங்கை அரசு சர்வதேசத்திற்கும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்திற்கும் சில வாக்குறுதிகளையும் வழங்கியிருந்தது.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றபோது பல முக்கிய நாடுகள் உதவியிருந்தன. இங்கு நிரந்தர சமாதானம், நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றும் அதனூடாக அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்ற அடிப்படையிலேயே அந்நாடுகளும் உதவியிருந்தன. அவ்வாறே இலங்கை அரசாங்கமும் சர்வதேசத்திற்கு வாக்குறுதிகளையும் வழங்கியிருந்தது. யுத்தம் முடியும் முன்னரும் முடிந்த பின்னரும் கொடுக்கப்பட்ட எந்தவொரு வாக்குறுதியும் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.

நம்பிக்கையுடன் செயற்பட்டு தீர்வை காண்பதற்கு நாம் 2011ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் எமது தீர்வினை முன்வைத்தோம். அந்தவகையில், தீர்வொன்று வழங்கப்படாமையே தமிழர் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமென்றும் அதனை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென்றும் நல்லிணக்க ஆணைக்குழுவே கூறியிருகின்றது. அப்படியானால், அதனை முன்வைக்க ஏன் அரசாங்கத்தினால் முடியாதிருக்கின்றது? இந்த நிலைமைகளை நாம கூறித்தான் சர்வதேச சமூகம் தெரியவேண்டுமென்பதற்கில்லை. சர்வதேசம் அனைத்தும் அறிந்திருக்கிறது.

ஆகையால், இலங்கை அரசு தனது செயற்பாட்டில் நம்பிக்கையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தால் மாத்திரமே சர்வதேசத்தன் கருத்தினை மாற்றமுடியுமே தவிர, குற்றம் சுமத்துவதால் எதனையும் மாற்றிவிட முடியாது என்பதனை ஜனாதிபதி தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment