Thursday, September 26, 2013
நாகப்பட்டினம்::நாகை மாவட்டம் வேதாரண்யத்திற்கு கிழக்கே இந்திய கடல் எல்லையில் கடந்த ஜுலை மாதம் 30-ந் தேதி மீன் பிடித்து கொண்டிருந்த நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 65 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 9 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கடந்த 22-ந் தேதி கொழும்பில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 34 மீனவர்கள் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அவர்களது படகுகள் மற்ற மீனவர்கள் அங்கேயே உள்ளனர். நாகையில் கடந்த 22-ந் தேதி திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 6 மாவட்ட மீனவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் 6 மாவட்டங்களை சேர்ந்த அனைத்து மீனவர்களும் ஒருங்கிணைந்து நாளை ( 27-ந் தேதி) அனைத்து விசைப்படகுகளிலும் வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கைக்கு சென்று தஞ்சம் அடையும் போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் படி நாளை (வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்த 6 மாவட்ட மீனவர்களும் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாகை தாலுகாவை சேர்ந்த மீனவர்கள் இன்று 20-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இன்று 9-வது நாளாக விசைப்படகுகளில் கருப்பு கொடி ஏற்றி கண்டனம் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment