Thursday, September 26, 2013
இலங்கை::கட்சி;த் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கட்சியின் மத்திய செயற்குழுவும், பாராளுமன்றக் குழுவும் ஏகமனதாக தீர்மானித்து தலைமைப் பொறுப்பை வழங்கினால் அதனை ஏற்றுக்கொள்ளத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு கட்சியை வெற்றிப் பாதைக்கு நகர்த்த பாடுபடத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என சில தரப்பினர் பிரச்சாரம் செய்து வருவதாகவும், இந்தப் பிரச்சாரத்தில் உண்மையில்லை எனவும அவர் குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயற்படத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment