Wednesday, September 4, 2013

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வீர வசனம் பேசி தமிழ் மக்களை இன்னுமொரு பேரழிவுக்குள் தள்ளிவிட முயற்சி: ஊடகங்களுக்கான ஜனாதிபதி இணைப்பாளர் ஆர். சிவராஜா!

Wednesday, September 04, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு வீர வசனம் பேசி தமிழ் மக்களை இன்னுமொரு பேரழிவுக்குள் தள்ளிவிட முயற்சி: ஊடகங்களுக்கான ஜனாதிபதி இணைப்பாளர் ஆர். சிவராஜா!
 
அரசியலுக்காக வீர வசனங்களை, யதார்த்தமற்ற விடயங்களை பேசுவதன் மூலம் தமிழ் மக்களை இன்னுமொரு பேரழிவுக்குள் தள்ளிவிடவா தமிழ் அரசியல் வாதிகள் முயற்சிக்கின்றனர் என கேள்வி எழுப்ப வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது என தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதி இணைப்பாளர் ஆர். சிவராஜா தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

தேர்தல் பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள வடக்கின் தமிழ் அரசியல் வாதிகள் உணர்ச்சிபூர்வமான வார்த்தைப் பிரயோகங்களைப் பேசி அரசியல் நடத்த முயல்வது தமிழர்களை மீண்டுமொரு இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு செல்வதற் காகவா என்று கேட்க விரும்புகிறேன்.

ஏற்கனவே மூன்று தசாப்த போரால் பாதிக்கப் பட்ட இரு சமூகத்தினரும் ஒற்றுமையாக வாழ முயன்று கொண்டிருக்கும் போது சந்தேகப்பார்வை தமிழர்கள் மீது விழும் வகையில் தமிழ் அரசியல் வாதிகள் பேசுவது நாகரீகமானதல்ல. அது எமது மக்களுக்கு மேலும் துன்பங்களையே தரப்போகி ன்றது.

தமிழர்களிடம் ஆயுதம் இருந்தால் சமஷ்டிக்கும் அப்பால் செல்லலாம் என தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கின்றார்.
மறுபுறம் அமிர்தலிங்கம், யோகேஸ் வரன், நீலன் திருச்செல்வம் போன்றோரை பரலோகம் போக்கியதன் பாதிப்பை இப்போதுதான் உணருகின்றோம் என கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்திருக்கிறார்.

இப்படியாக தமிழ் மக்களைக் குழப்பி அவர்களின் வாக்குகளை பெறுவதற்கு முயலாமல் மக்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் பிரச்சினைகளை அறிந்து இவர்கள் செயற்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment