Wednesday, September 04, 2013
இலங்கை::நவனீதம்பிள்ளையின் கருத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை நிiமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஏமாற்றமளிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் நோக்கங்களுக்காக நவனீதம்பிள்ளையின் விஜயத்தை தமது கட்சி பயன்படுத்திக்கொள்ளாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நவனீதம்பிள்ளையின் விஜயத்தின் போது வெளியிடப்பட்ட கருத்து எமது நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்கால நிலைமைகள் குறித்து கவலையடைவதாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு எதிராக விமர்சனங்களைச் செய்யும் சூழ்நிலையை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment