Wednesday, September 04, 2013
இலங்கை::ஐநா மனித உரிமை ஆணையாளர் நவிபிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்து சென்றதன் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இனவாத கருத்துக்கள் அதிகரித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
புலிகள் தீவிரவாத இயக்கம் இல்லை. பிரபாகரன் தீவிரவாதி அல்ல வீரர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.விக்னேஸ்வரன் அண்மையில் கூறியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சட்டத்தை பாதுகாக்கவென செயற்பட்ட விக்னேஸ்வரன் இவ்வாறு கருத்து வெளியிடுவது பொறுத்தமற்றது என முஸாமில் குறிப்பிட்டுள்ளார்.
அன்று ஆயுதம் மற்றும் சர்வதேச பலத்தைக் கொண்டு செயற்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் இன்று அரசியல் மற்றும் சர்வதேச பலத்தை பயன்படுத்தி செயற்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவிபிள்ளை நடுநிலையானவர் இல்லை என்பதால் அரசாங்கத்தில் இருந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் அவரை ஏற்றுக் கொண்டதை முஸாமில் கண்டித்துள்ளார்.
நாட்டுக்கு எதிரான நிகழ்ச்சி நிரலுக்கு தகவல் வழங்கியமை தவறான விடயம் என ஹக்கீம் - நவிபிள்ளை தொடர்பில் கருத்து வெளியிட்ட முஸாமில் தெரிவித்தார்.

No comments:
Post a Comment