Sunday, September 15, 2013

அத்வானியை சமாதானப்படுத்த சுஸ்மா - தலைவர்கள் முயற்சி!

Sunday, September 15, 2013
புதுடெல்லி::மோடி விவகாரம் குறித்து கட்சி தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு காட்டமான கடிதம் எழுதிய அத்வானியை சமாதானப்படுத்த சுஸ்மா சுவராஜ், ஆனந்தகுமார், பல்பீர் புன்ஞ் ஆகிய தலைவர்கள் நேற்று எல்.கே . அத்வானியை சந்தித்து அவரை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டனர்.
 
பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரக்குழு தலைவராக சில வாரங்களுக்கு முன் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நேற்று முன்தினம் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் பிரதமர் வேட்பாளாராகவும் மோடி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இதற்கு கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரச்சாரக்குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டவுடன் அத்வானி தனது பதவிகளை ராஜினாமா செய்தார்.
 
பிறகு அவரை ஒருவழியாக தலைவர்கள் சமாதானம் செய்தனர். இப்போது மோடி பிரதமர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து கட்சித்தலைவர் ராரஜ்நாத் சிங்கிற்கு அத்வானி கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் பா.ஜ.க தலைவர்கள் சுஸ்மாசுவராஜ், ஆனந்தகுமார். பல்பீர்புஞ்ச் ஆகியோர் அத்வானியை சந்தித்து அவரை சமாதானப்டுத்த முயன்றனர். அத்வானி இன்னமும் மனவேதனையில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர் கட்சித்தலைவர் ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதினாராம். அந்தக்கடித்த்தில் உங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிலையில்தான் சுஸ்மா போன்ற தலைவர்கள் அவரை சந்தித்துள்ளனர். பின்னர் வெளியில் வந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுஸ்மா யாரும் அப்செட் ஆகவில்லை என்று கூறினார். அத்வானியின் கடிதம் பற்றி தான் ஆலோசிக்கவில்லை என்றும் சுஸ்மா கூறினார். முன்னதாக பிரதமர் வேட்பாளாராக தேர்வு செய்யப்பட்டதும்  அத்வானியை சந்தித்த மோடி அவரிடம் வாழ்த்து பெற்றார்.  அப்படி இருந்தும் கூட ராஜ்நாத் சிங்கை தாக்கி அத்வானி கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.

No comments:

Post a Comment