Saturday, September 14, 2013

தபால்மூல வாக்களிப்பிற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவு!

Saturday,September,14, 2013
இலங்கை::தபால்மூல வாக்களிப்பிற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
 
கடந்த 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட முடியாமல் போனவர்களுக்கு, அதன்பொருட்டு இன்றைய தினமும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
 
தமது அடையாளத்தை உறுதிபடுத்தக்கூடிய ஆவணங்களுடன் தேர்தல்கள் செயலகத்திற்கு சென்று தபால்மூல வாக்கை அளிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தபால்மூலம் இன்னும் வாக்களிக்காதவர்கள் அலுவலக நேரத்திற்குள் தமது வாக்கினை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment