Wednesday, September 11, 2013
இலங்கை::எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க - யாழ். ஆயர் தோமஸ் சௌந்தர்நாயகம் சந்திப்பு!
இலங்கை::எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க - யாழ். ஆயர் தோமஸ் சௌந்தர்நாயகம் சந்திப்பு!
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று செவ்வாய்க்கிழமை யாழ். ஆயர் தோமஸ் சௌந்தர்நாயகத்தை சந்தித்து கலந்துரையாடினார்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சங்காணை மற்றும் காரைநகர் பிரதேசத்திலும் ரணில் விக்கிரமசிங்க இன்று பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டார்.
இந்த சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment