Wednesday, September 11, 2013

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு!

Wednesday, September 11, 2013
தஞ்சை::தே.மு.தி.க தலைவர் விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவை அவதுறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விஜயகாந்த் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தஞ்சையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் இன்று விஜயகாந்த் நேரில் ஆஜராக நீதிபதி சேதுமாதவன் உத்தரவிட்டிருந்தார். விஜயகாந்த் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

No comments:

Post a Comment