Wednesday, September 11, 2013
இலங்கை::வடபகுதியின் பிரதான நகரங்களில் ஒன்றான வட்டுக்கோட்டைக் கும் நாட்டின் இனப்பிரச்சினைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. 1976ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதியன்று தமிழரசுக்கட்சி என்று தன்னை ஆரம்பம் முதல் அழைத்து வந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான அரசியல் கட்சி தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற புதுப் பெயரில் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மக்கள் ஆதரவை பெருக்கிக் கொள்ளும் எண்ணத்துடன் நாம் பதவிக்கு வந்தால் சுதந்திர தமிbழம் ஒன்றை உருவாக்குவோம் என்ற வட் டுக்கோட்டை பிரகடனத்தை விடுத்தது.
இலங்கை::வடபகுதியின் பிரதான நகரங்களில் ஒன்றான வட்டுக்கோட்டைக் கும் நாட்டின் இனப்பிரச்சினைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. 1976ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதியன்று தமிழரசுக்கட்சி என்று தன்னை ஆரம்பம் முதல் அழைத்து வந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான அரசியல் கட்சி தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற புதுப் பெயரில் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மக்கள் ஆதரவை பெருக்கிக் கொள்ளும் எண்ணத்துடன் நாம் பதவிக்கு வந்தால் சுதந்திர தமிbழம் ஒன்றை உருவாக்குவோம் என்ற வட் டுக்கோட்டை பிரகடனத்தை விடுத்தது.
தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் இந்த போலி வாக்குறுதியை நம்பி தமிழ் மக்கள் அக்கட்சிக்கு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்ததனால் 1977ம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜய வர்தனவின் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்க காலத்தில் தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி எதிர்க்கட்சியாகி அதன் பாராளு மன்றத் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகி இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் புதிய சாதனை யொன்றை ஏற்படுத்தினார்.
1976ம் ஆண்டின் வட்டுக்கோட்டை பிரகடனமே இலங்கையில் பிரி வினைவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் ஆரம்ப அடித்தளமாக அமைந்தது. அதனை மையமாக வைத்தே தமிழ் இளைஞர்கள் பிரபாகரன், உமா மகேஸ்வரன், சிறி சபாரட்ணம், பாலகுமார், பத்ம நாபா போன்றவர்கள் தலைமையில் போராளிக்குழுக்களை உரு வாக்கி பின்னர் அது இலங்கையின் சுதந்திரத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வகையில் விஸ்வரூபம் எடுத்தமை குறிப்பிடத் தக்கது.
இது போன்றே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக் கோட்டையில் வைத்து பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நான் வடக்கின் வசந்தம் அபிவிருத்திப் பணி களை புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் வடமாகாணசபையிடம் ஒப்படைப்பேன் என்ற இன்னுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக் கோட்டை பிரகடனத்தை கடந்த ஞாயிற்றுக் கிழமை வெளியிட்டார்.
வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதென்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமோ, தமிழ்த் தேசியக்கூட்டமைப்போ எடுக்க வில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதென்ற தீர்மானத்தை எடுத்தார்.
அரசியல் சுதந்திரத்தைப் பெற்றுள்ள வடபகுதி மக்கள் தங்களைத் தாங்களே ஜனநாயக அடிப்படையில் நல்லாட்சி செய்து வடமாகா ணத்தை அபிவிருத்தி செய்வதற்கான தங்கள் பிரதிநிதிகளை எதிர்வரும் 21ம் திகதியன்று தெரிவு செய்து வடமாகாண சபையை பதவியில் அமர்த்த வேண்டும்.
தான் முன்னெடுத்துச் சென்ற வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டப் பணிகளை நிறுத்தி, அந்தப் பொறுப்பை வடபகுதி மக்களிடம் நான் 22ம் திகதியன்று ஒப்படைப்பேன் என பொருளாதார அபி விருத்தி அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ வட்டுக்கோட்டையில் தெரி வித்தார்.
வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டப் பணிகளை தான் செப்டம்பர் மாதம் 21ம் திகதிக்கு பின்னர் முன்னெடுத்துச் செல்லமாட்டேன் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.
வட்டுக்கோட்டை தொகுதியின் வலிகாமம் மேற்கு பகுதியில் இருக் கும் சித்தன்கேணியில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் களை ஆதரித்து நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரை நிகழ்த்திய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, “வட்டுக்கோட்டை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். இங்கு அரசியல் வரலாற்று முக்கியத்துவம் வாய் ந்த பல நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருந்து நான் இம்மாதம் 22ம் திகதிக்கு பின்னர் வடக்கின் வசந்தம் அபிவிருத்தி திட்டப் பணிகளை நிறுத்தப் போகிறேன் என்று அறிவிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.
ஜனநாயகத்தின் அடிப்படைத் தத்துவமாக விளங்குவது மக்களுக்காக மக்களே தங்களை ஆள வேண்டும் என்பதாகும் என்று தெரி வித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சுதந்திர இலங்கையில் வட பகுதி மக்கள் முதல் தடவையாக தங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்து மக்களின் விருப்பத்துடன் மக்களுக்கு பணியாற் றும் அரிய வாய்ப்பை பெற்றுள்ளார்கள் என்று கூறினார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தங்களை அதிகாரபீடத்தில் அமர்த்தி னால் வடமாகாணத்தை வெளிநாட்டில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்கள் அனுப்பும் நிதியையும் ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகள் கொடுக்கும் பணத்தையும் பயன்படுத்தி வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வோம் என்று உறுதியளித்தார்கள். ஆனால், இன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப் பினர் எதையும் செய்வதற்கு பணமில்லாத நிலையில் இருக்கிறார் கள் என்று கூறினார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு மக்களுக்கு பணி செய்வதற்காக தங்க ளுக்கு அதிகாரத்தை தாருங்கள் என்று கேட்கவில்லை. உள்ளூ ராட்சி மன்ற, மாகாணசபை மட்டத்தில் அரசாங்க இயந்திரம் தமிழர் பிரச்சினைக்கு எவ்வித தீர்வினையும் ஏற்படுத்தவில்லை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காகவே தங்களுக்கு ஆத ரவளிக்குமாறு மக்களிடம் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு கேட்கிறது என்றார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரின் இந்த அபிலாசை நடைமுறையில் சாத்தியமானால் வடபகுதி மக்கள் மனித உரிமைகளில் ஒன்றான பொருளாதார சுதந்திரத்தை இழந்துவிடுவார்கள் என்றும் கூறினார்.
எனவே, வடமாகாண மக்கள் மதிநுட்பத்துடன் சிந்தித்து செப்டம்பர் மாதம் 21ம் திகதி தாங்கள் விரும்பும் பிரதிநிதிகளுக்கு வாக்க ளித்து அவர்களை அதிகாரத்தில் அமர்த்தி அதன் மூலம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.





No comments:
Post a Comment