Wednesday, September 11, 2013

இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்கக்கோரி நாகை, காரைக்கால் மீனவர்கள் இன்று 6வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் :-மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு காரைக்கால் மீனவர்கள் முடிவு!

Wednesday, September 11, 2013
காரைக்கால்::இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்கக்கோரி நாகை, காரைக்கால் மீனவர்கள் இன்று 6வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக காரைக்கால் மீனவர்கள் அறிவித்துள்ளனர். நாகை மீனவர்கள் 44 பேரும், காரைக்கால் மீனவர்கள் 21 பேரும் என 65 பேர் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அ

ப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 65 மீனவர்களையும் கைது செய்தனர்.
 
இந்நிலையில் பருத்திதுறை சிறையில் அடைக்கப்பட்ட 34 மீனவர்களை பருத்திதுறை கோர்ட் கடந்த 4ம் தேதி விடுதலை செய்தது. ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஒப்படைத்தால் தான் செல்வோம் எனக்கூறி மீனவர்கள் கோர்ட்டில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரும் அங்குள்ள இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரி நாகை, காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 6வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் காரைக்காலில் நேற்று மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
 
இதில் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது என் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக கிளிஞ்சல்மேடு மீனவ கிராம பஞ்சாயத்து தலைவர் வீரதாஸ் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக இதே கோரிக்கையை மத்திய, மாநில அரசுக்கு வலியுறுத்தியும், யாரும் செவிசாய்ப்பதாக இல்லை. எனவே காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமத்தினரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment