Friday, September 20, 2013

மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகள் முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. மக்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி வாக்களிக்கச் செல்ல முடியும்: கபே அமைப்பு!

Friday, September 20, 2013
இலங்கை::வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடவடிக்கைகள் முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. மக்கள் எந்தவிதமான அச்சமும் இன்றி வாக்களிக்கச் செல்ல முடியும் என்று நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலைக் கண்காணிக்கும் கபே அமைப்பு உறுதியளித்துள்ளது.

நேற்று யாழ்.வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்படி உறுதிமொழி கபே அமைப்பின் தேசிய அமைப்பாளர் அகமட் மனாஸ் வழங்கியுள்ளார்.

நீண்டகாலத்தின் பின்னர் வடமாகணசபைத் தேர்தல் நடைபெறுகின்றபடியால் அனைவருடைய கண்காணிப்பும் வடமாகாணசபைத் தேர்தலிலேயே உள்ளது. இதுதவிர முதற்தடவையாக மாகாணசபைத் தேர்தலில் வாக்களிப்பவர்கள் தொகை அதிகமாக உள்ளது. 

இதàல் மாகாணசபைத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது, விருப்பு வாக்குகளை எவ்வாறு அழிப்பது தொடர்பாக விழிப்புணர்வுகள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இதுதவிர விழிப்பூட்டும் துண்டுப்பிரசுரங்களும் வடமகாணத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டும், வீடு வீடாக வினையோகிக்கப்பட்டும் வருகின்றது.

மிக நீண்ட காலமாக நடைபெற்றுவந்த ஏனைய தேர்தல்காலங்களில் மக்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்படக் கூடாது என்ற காரணத்திàல் தேர்தல் தினத்தில் மட்டுமன்றி, தேர்தல் அறிவிக்கப்பட்ட காலம் தொடக்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இதன் மூலம் இம்முறை நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் வாக்களர்கள் அதிகமானவர்கள் புதிதாக பதிவு செய்து வாக்களிக்கும் உரிமையினைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள். 

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் போது பெருமளவான வாக்காளர்கள் பயம், அச்சம் காரணமாக வாக்களிக்கச் செல்லாமல் இருந்திருக்கின்றனர். வாக்களார்கள் எந்தக் கட்சிக்கு, எந்த சுயேட்சைக் குழுவிற்கு, எந்த நபருக்கு விருப்பு வாக்கினை வழங்கிàர்கள் என்று எவருக்கும் தெரிந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருக்காது. வாக்களித்தவருக்கு மட்டும்தான் தெரியும் அவர் யாருக்கு வாக்கிளத்தார் என்று.

ஆகையார் எந்த ஒரு பயம், அச்சமின்றி வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களித்கலாம். கபே அமைப்பின் ஊடாக வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல விசேட வாகனங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 
இதுதவிர 800 ற்கும் மேற்பட்ட கண்காணிப்பாளர்கள் வடமாகாணசபைத் தேர்தலில் தீவிர கண்காணிப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தேர்தல் தினத்தில் விசேடமாக மேலதிக கண்காணிப்பாளர்களும் வரவளைக்கப்படவுள்ளனர். எனவே எந்தவிதமான பயமும் அச்சமும் இல்லாமல் அனைத்து மக்களும் சுதந்திரமாக வாக்களிக்க முடியும். சகல மக்களும் தமது வாக்குரிமையினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கபே அமைப்பு மேலும் கேட்டுக் கொண்டுள்ளது..
 
வடக்கு,வடமேல்,மத்திய மாகாணங்களில் நாளை நடைபெறவுள்ள தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக  539 முறைப்பாடுகள்!
 
வடக்கு,வடமேல்,மத்திய மாகாணங்களில் நாளை நடைபெறவுள்ள தேர்தல் விதிமுறை மீறல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரைக்கும் 539 முறைப்பாடுகள் கபே அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்படி அமைப்பின் தேசிய நிணைப்பாளர் அகமட் மனாஸ் தெரிவித்துள்ளார்.
 
ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் வடமாகாணத்தில் குறைந்தளவாக 87 முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்.வை.எம்.சி.ஏ மண்டபத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:-
 
வடமாகாணம், வடமேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணம் ஆகிய மாகாணங்களுக்கான தேர்தல் நாளை நபெறவுள்ளது. இதனடிப்படையில் மேற்படி மாகாணங்களில் நடைபெற்ற தேர்தல் விதிமுறைகள் மீறல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரையில் 539 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் வடமாகாணத்தில் மட்டுமே குறைந்தளவு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
குறிப்பாக வடமாகாணத்தில் 87 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகப்படியாக யாழ்.மாவட்டத்தில் மட்டும் 33 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் தேர்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்டதாக 25 முறைப்பாடுகளும், வன்முறை செயல்கள் தொடர்பாக 8 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment