Tuesday, September 3, 2013

கச்சத்தீவை திரும்பப்பெற பிரதமரிடம் வலியுறுத்துவேன்: மத்திய மந்திரி ஜி.கே.வாசன் உறுதி!

Tuesday,September,03,2013
சென்னை::மத்திய மந்திரி ஜி.கே.வாசன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் முலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். முன்னதாக விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையிடம் 1974-ம் ஆண்டு கச்சத்தீவை இந்தியா ஒப்படைத்தது. 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழ்நிலை வேறு. தற்போது இருக்கும் சூழ்நிலை வேறு. அப்போது இலங்கை நம்மிடம் நட்புறவுடன் இருந்தது. தற்போது இலங்கை நம்மிடம் முன்பு போல் இல்லை.

தமிழர்களுக்கு விரோதமான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறது. இந்திய மீனவர்கள் கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்க சென்றால் அவர்களை அடித்து உதைத்து கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது.

இந்த நிலையில் கச்சத்தீவை திரும்ப பெறுவது அவசியம். இது பற்றி பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment