Tuesday, September 3, 2013

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கையில் நிரந்தரமாக ஸ்தாபிக்கப்படுவது அவசியம்: (புலி)கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் விக்கினேஸ்வரன்!

Tuesday,September,03,2013
இலங்கை::ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கையில் நிரந்தரமாக ஸ்தாபிக்கப்படுவது அவசியமென கடந்த வாரம் வருகை தந்திருந்த மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையிடம் தமிழ்க் (புலி)கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசருமான சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நவநீதம்பிள்ளையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய தமிழ்க் (புலி)கூட்டமைப்பின் தூதுக் குழுவில் அங்கம் வகித்திருந்த விக்னேஸ்வரன் உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் தான் தெரியப்படுத்திய விடயங்கள் பற்றிக் குறிப்பிடும் போதே இலங்கையில் மனித உரிமைகள் பேரவையின் நிரந்தர கண்காணப்புக்குழுவின் பிரசன்னத்திற்கான தேவைபற்றி கோரிக்கை விடுத்ததாகக் கூறினார்.

நெருக்குதல்கள், அழுத்தங்கள் இருந்தால் மட்டுமே அரசாங்கம் தமிழர்களுக்கு எதனையும் செய்கின்றது. இல்லையேல் புறக்கணித்து விடுகிறது. வடமாகாணத் தேர்தல் இந்தியாவின் நெருக்கடியால் நடைபெறப் போகின்றது.
எனவே அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் வண்ணம் ஒரு நிரந்தர ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்காணிப்புக் குழு இலங்கையில் நியமிக்கப்பட வேண்டும். கூறினார்...

வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட் பாளர் யார் என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்தால் அவருடன் பகிரங்க விவாதம் நடத்த நான் தயாராகவுள்ளேன்: சி.வி.விக்கினேஸ்வரன்!

வட மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட் பாளர் யார் என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்தால் அவருடன் பகிரங்க விவாதம் நடத்த நான் தயாராகவுள்ளேன். ஆனால், அவ்வாறான ஒரு அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில் உங்களுடன் விவாதம் நடத்தும் கோரிக்கையை நான் நிராகரிக்கின்றேன் என்று தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன் அறிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈ.பி.டி.பி.யின் சார்பில் யாழ். மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சி.தவராசாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே விக்கினேஸ்வரன் இவ்வாறு கூறியுள்ளார்.

பகிரங்க பொது விவாதத்திற்கு வருமாறு தவராசா விக்கினேஸ்வரனுக்கு சில தினங்களுக்கு முன்னர் கடிதம் அனுப்பியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே நேற்று விக்கினேஸ்வரன் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment