Tuesday, September 3, 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்படுகின்றார்: ஜீ.எல்.பீரிஸ்!


Tuesday,September,03,2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை பக்கச்சார்பாக செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை நிலைமைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையின் அறிக்கை ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
லண்டனில் அமைந்துள்ள பிரி;த்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
 
நவனீதம்பிள்ளையின் அறிக்கையின் தொணி மற்றும் உள்ளடக்கங்கள் பக்கச்சார்பான நிலைமையை வெளிப்படையாக உணர்த்துகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற யுகோஸ்லாவியா, கொலம்பியா போன்ற நாடுகளில் யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க பணிகளுக்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது எனவும், இலங்கையில் குறுகிய காலத்தில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
யுத்தம் இடம்பெற்ற வலயங்களில் அரசாங்கம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் உட்கட்டுமான வசதிகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 
வெளிப்படையான முறையில் நிலைமைகளை பார்வையிடுவதற்காக நவனீதம்பிள்ளையை இலங்கை அரசாங்கம் அழைத்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கைக்கு விஜயம் செய்ய முன்னதாகவே நவனீதம்பிள்ளை தீர்மானம் ஒன்றுடன் நாட்டுக்கு விஜயம் செய்தமை அவரது கருத்துக்கள் மூலம் அம்பலமாகியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அரசாங்கம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை எதாச்சதிகாரம் நோக்கி நகர்வதாக நவனீதம்பிள்ளை குற்றம் சுமத்திய போதிலும் அதற்கான வலுவான ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments:

Post a Comment