இலங்கை::வடக்கு மாகாணசபைக்கான தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று செவ்வாயக்கிழமை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட தலைமையகமான மார்ட்டீன் வீதி அலுவலகத்தில் இத்தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் யாழ் சென்றுள்ளனர்.
இதனிடையே (புலி)கூட்டமைப்பின் பிரச்சாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. பிரதேச ரீதியான பிரச்சாரக் கூட்டங்களும் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளன. வடமராட்சியின் மாலுசந்தி மற்றும் புத்தூர் பகுதிகளில் முதலாவது கூட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. இக்கூட்டங்களில் சம்பந்தன் மற்றும் சுமந்திரனுள்ளிட்ட நாடாளுமன்ற அங்கத்தவர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக (புலி)கூட்டமைப்பு சார்பு வேட்பாளர்களான புலிகளின் பல கொலைகளின் சூத்திரதாரி அனந்தி எழிலன் மற்றும் பலரும் தேர்தல் பரப்புரைகளில் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:
Post a Comment