Tuesday,September,03,2013
இலங்கை::அபிவிருத்தி நோக்கங்களுக்காகவே சீனாவுடன் உறவுகள் பேணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொருளாதார மற்றும் அபிவிருத்தி நோக்கங்களுக்காகவே சீனாவுடன் உறவுகள் பேணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சில நாடுகள் சீனாவுடனான உறவுகளை பிழையாக அர்த்தப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனாவுடனான உறவினை தந்திரோபாய நகர்வாகவே நோக்குகின்றன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவுடன் இலங்கை பேணி வரும் உறவுகள் எந்தவொரு நாட்டுக்கும் அச்சுறுத்தல்கள் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment