Tuesday, September 3, 2013

தேர்தல் நடவடிக்கைகளுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள்: பெப்ரல் அமைப்பு!

Tuesday,September,03,2013
இலங்கை::தேர்தல் நடவடிக்கைகளுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
இந்த நிலைமை தொடர்பில் சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டிஆராய்ச்சி கூறியுள்ளார்.
 
கடந்த காலங்களில் அரச சேவையுடன் தொடர்புடைய பட்டதாரிகள், கல்வி சேவையுடன் தொடர்புடைய அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்பது தொடர்பில் அறியக்கிடைத்ததாக பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
 
எதிர்காலத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாது  இருப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில், சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்திற்கு விசேட கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
 
அவ்வாறானதொரு கடிதம் தமக்கு கிடைக்கவில்லை எனவும், எனினும் அது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாகவும் இது தொடர்பில் நாம் வினவியபோது சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் ஆர்.பி.பீ.திலகசிறி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment