Tuesday,September,03,2013
இலங்கை::அரசியல் ரீதியாக வெற்றிகொள்ள முடியாதவர்கள் தம்மீது முத்திரை குத்துவதாக: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்!
அரசியல் ரீதியாக வெற்றிகொள்ள முடியாதவர்கள் தம்மீது முத்திரை குத்துவதாக ஜனாதிபதி குற்றம்சுமத்தியுள்ளார்.
குருணாகலை மாளிகாபிற்றியவில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், சிறிலங்கா சுதந்திர கட்சி ரோஜாப் பூக்களில் இருந்து இந்த ஆட்சியை கைப்பற்றவில்லை என்று தெரிவித்தார்.
கடினமாக பயணத்தின் அடிப்படையிலேயே இந்த ஆட்சி கைப்பற்றப்பட்டது
எனவே இதன்போது பல்வேறு சவால்களுக்கும் முகம்கொடுக்க வேண்டிய நிலைமை சிறிலங்கா சுதந்திரகட்சிக்கு இருக்கின்றது.
ஐக்கிய தேசியகட்சியின் தலைமைக்கு முடியாவிட்டால், தமக்கு எதுவும் செய்ய முடியாது என்று குறிப்பிட்ட அவர், வடக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்தி அங்கு தேர்தலை நடத்துவதை விட எவ்வாறான ஜனநாயகத்தை எதிர்பார்கிறார்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பினார்.
குருநாகலில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 62 ஆவது ஆண்டுவிழாவில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வெளிநாட்டு அழுத்தங்களுக்கோ, உள்நாட்டு சதிகளுக்கோ தாம் அடிபணியப் போவதில்லை. ஜனநாயகத்தை காக்கவும், வெளிநாட்டு அழுத்தங்களை முறியடிக்கவும் அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும்.
ஜனநாயகத்துக்கு எதிரான பாதையிலோ, எதேச்சாதிக்காரப் பாதையிலோ செல்லும் நோக்கம் எனக்கோ, எனது அரசாங்கத்துக்கோ இல்லை. இலங்கையைப் போன்று ஆசியாவில் வேறெந்த நாட்டிலும் இந்தளவுக்கு தேர்தல்கள் நடக்கவில்லை.
2005இல் ஆட்சிக்கு வந்த பின்னர், எமது அரசாங்கம் 11 தேர்தல்களை நடத்தியுள்ளது. புலிகளைத் தோற்கடித்துள்ளது. இதைவிட வேறென்ன ஜனநாயகம் உள்ளது? சிலர் என்னை எப்படியாவது ஆட்சியில் இருந்து அகற்ற முனைகின்றனர் என்றார்..
வடக்கில் எவரும் வாய்திறக்க முடியாத நிலை இருந்தது. அந்த நிலையை நாமே மாற்றினோம். தற்போது சகலரும் சுதந்திரமாக வாழும் சூழல் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அழுத்தங்களுக்கோ, உள்நாட்டு சதிகளுக்கோ இலங்கை அரசாங்கம் ஒருபோதும். அடிபணியாது. ஜனநாயகத்தை காக்கவும், வெளிநாட்டு அழுத்தங்களை முறியடிக்கவும் அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும்.
நாட்டில் சகல பகுதிகளிலும் அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படு த்தப்பட்டு வருகின்றன. ஒருமுறை நாட்டைச் சுற்றிப் பார்ப்பவர்கள் இதனைத் தமது கண்களால் கண்டு உணரமுடியும்.
நாட்டின் சகல மதங்களையும் நாங்கள் சமமாகவே பார்க்கின்றோம். பெளத்த மதம் அரசியலமைப்பில் உள்ளபோதும், ஏனைய சகல மதங்களுக்கும் உரிய இடத்தையும், கெளரவத்தையும் வழங்கி வருகின்றோம்.
சிலர் பொய் பிரசாரங்களைப் பரப்பி வருகின்றனர். நாம் முஸ்லிம் மக்களைப் பகைத்துக் கொள்வதாகவும், கிறிஸ்தவ மக்களைப் புறக்கணிப்பதாகவும் புரளிகள் கிளப்பப்படுகின்றன. மக்கள் இவற்றில் தெளிவுபெற வேண்டும் என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

No comments:
Post a Comment