Tuesday, September 3, 2013

புலிகளின் அரசியல் முன்னணியான TNAயின் சுரேஷ் வெளியிட்டுள்ள கருத்துக்கு அரசாங்கத்தின் பதில் என்ன?: ஜாதிக ஹெல உறுமய!

Tuesday, September 03, 2013
இலங்கை::ஆயுதங்களை கையில் எடுத்தால்,  சமஷ்டி அதிகாரத்திற்கு அப்பால் சென்ற அரசியல் தீர்வை பெறமுடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டுள்ள கருத்துக்கு அரசாங்கத்தின் பதில் என்னவொன்று ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது.
 
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராகவும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டவிரோத மற்றும் அரச விரோத கருத்தை வெளியிட்டுள்ளதாக ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார்.
 
புலிகளின் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு கடந்த நான்கு வருடங்களில் முதல் முறையாக புலிகளின் அரசியல் முன்னணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வடக்கில் தேர்தல் மேடையில் இப்படியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
 
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபையில் ஆட்சியை கைப்பற்றும் முன்னரே இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ள நிலையில், அவர்களின் கைகளுக்குள் வடக்கு மாகாண சபை சென்றால் என்ன நிலைமை ஏற்படும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக ஜாதிக ஹெல உறுமய கொண்டிருந்த நிலைப்பாடு உறுதியாகி வருவது மாத்திரமல்ல,   நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம் குறித்து முன்னமே தாம் வெளியிட்டிருந்த எதிர்வுகூறல் தற்போது உறுதியாகி விட்டதாகவும் ஓமல்பே
சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். 

No comments:

Post a Comment