Monday, September 02, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு லண்டனில் வைத்து பதிலளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு லண்டனில் வைத்து பதிலளிக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கை எதேச்சாதிகாரத்தை நோக்கி நகர்வதாக நவனீதம்பிள்ளை அண்மையில் தெரிவித்திருந்தார். இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் முன்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க உள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பீரிஸ் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார். லண்டனில் நடைபெறவுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்வு ஒன்றில் பிரதம விரிவுரையை அமைச்சர் ஆற்றுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. லண்டனில் அமைந்துள்ள அந்நாட்டுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நவனீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment