Tuesday, September 10, 2013
இலங்கை::தென்மராட்சி கரம்பைக்குறிச்சியில் ஒரு பெண்கள் குழுவுடன் கலந்துரையாடலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் ஈ.பி.டி.பி. யுடன் இணைந்து வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடு;ம் யாழ் வேட்பாளர் ஞானசக்தி உரையாற்றும் போது 30 வருட கால யுத்தத்தால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டது பெண்களே. அந்த வ

லியை ஒப்பீட்டளவில் கூடுதலாகப் பெண்களே உணரமுடியும்.
கணவரின் அல்லது பிள்ளையின் இழப்பு அந்த வலி பெண்ணால் தான் முழுமையாக உணரப்படமுடியும். 30 வருட தேசிய போராட்டத்தில் நாங்களும் ஈடுபட்டிருக்கிறோம். அகதிவாழ்வு, உயிரிழப்பு, பொருளாதாரஅழிவு என்பன கூடுதலாக பெண்களையே பாதித்திருக்கிறது.
தொடர்ந்து இதனைச் சந்திப்பதற்கான பௌதிக பலமோ, மனோ பலமோ எமக்கு கிடையாது. அரசியல் தீர்வு, தடுத்து வைக்கப்பட்டோரின் விடுதலை, திட்டமிட்ட குடியேற்றங்கள்,மறுபக்கம் வாழ்வாதாரப் பிரச்சனைகள் குடிநீர், வீதி, மின்சாரம் அடிப்படை சுகாதாரம் தவிர வேலை வாய்ப்பு சிறார் கல்வி இவை கணக்கில் எடுக்கப்பட வேண்டும். சிறுவர்கள், பெண்களின், ஊனமுற்றவர்களின் மன வளம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் .
நிராகரிப்பு அரசியல் சமூகத்திற்கு ஆக்க பூர்வமாக உதவவில்லை 13 வது அரசியல் சீர்திருத்தம் தேய்வடைந்து போனதற்கு தமிழ் அரசியலின் அலட்சியப் போக்கும் காரணம்
தவிர அரசியலில் பெண்களுக்கு அங்கீகாரம் வேண்டும். அவர்களுடைய விகிதாசாரத்திற்கேற்ப அது அதிகரிக்கப்படவேண்டும். அதற்கான செயற்பாட்டை உறுதியாக இடையறாது முன்னெடுப்பதே எனது நோக்கமாகும்.
பெண்கள் தமது பணிகளை முன்னெடுக்க பெண்களின் கையில் அதிகாரம் வேண்டும்.
பெண்கள் தமது பணிகளை முன்னெடுக்க பெண்களின் கையில் அதிகாரம் வேண்டும்.

No comments:
Post a Comment