Wednesday, September 11, 2013

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதிக்கான மின் இணைப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்!

Wednesday, September 11, 2013
இலங்கை::யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு பகுதிக்கான மின் இணைப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

அரியாலை கிழக்கிற்கு இன்றைய தினம்  விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் குறித்த பகுதிக்கான மின்விநியோகத் திட்டத்தை நினைவுக்கல்லினை திரைநீக்கம் செய்துவைத்து ஆரம்பித்து வைத்தார்.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 18 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் 7 கிலோமீற்றர் தூரத்திற்கு இம் மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இதனூடாக 160 குடும்பங்கள் பயன்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், தமது பகுதிக்கான மின்விநியோகத் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி துறைசார்ந்தோர் ஊடாக விரைவான நடவடிக்கையினை முன்னெடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அப்பகுதி மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் அவர்கள், ஒருபகுதியின் முன்னேற்றத்துக்கு மின்சாரமும், வீதியும் முக்கியமானது என்பதுடன் தற்போது மின்சாரம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் இப்பகுதிக்கான வீதியும் புனரமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

இதனிடையே அப்பகுதி மக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயம், கடற்றொழில் மற்றும் கால்நடைவளர்ப்பு போன்ற தொழிற்துறைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

இதனிடையே குறித்த பகுதியில் மண் அணையொன்றை அமைப்பது சட்டவிரோத மணல் அகழ்வு அங்குள்ள ஆலயங்களுக்கு மின்னிணைப்பை வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பில் விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இதன்போது வடக்கின் வசந்தம் திட்டம் முகாமையாளர் குணசீலன், இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய மின்பொறியியலாளர் ஞானகணேசன், வடக்கின் வசந்தம் திட்ட பிராந்திய பொறியலாளர் கோசல, யாழ்.மின்அத்தியட்சகர் அருள்நாதன், ஈ.பி.டி.பியின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் ரவீந்திரதாசன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சிறிகணேசா ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment