Wednesday, September 11, 2013

இலங்கை அரசின் அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்தி இத்தாலியின் மிலானோ நகர் முழுவதும் சேறுபூசும் சுவரொட்டிகளை ஒட்டிய நபர்களுக்கு எதிராக ரோமில் உள்ள இலங்கை தூதரகம் இத்தாலி பொலிஸாரிடம் முறைப்பாடு!

Wednesday, September 11, 2013
மிலானோ::இலங்கை அரசின் அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்தி இத்தாலியின் மிலானோ நகர் முழுவதும் சேறுபூசும் சுவரொட்டிகளை ஒட்டிய நபர்களுக்கு எதிராக ரோமில் உள்ள இலங்கை தூதரகம் இத்தாலி பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
 
இலங்கை தூதரகத்தின் அதிகாரபூர்வ முத்திரை மற்றும் அதன் அதிகாரிகளின் கையெழுத்தை பயன்படுத்தி ஆவணங்களை மொழிபெயர்க்கும் ஒருவருக்கு எதிராக இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
 
இந்த மொழிப்பெயர்ப்பாளர் போலியான நபர் எனவும் அவரிடம் சிக்கியவர்கள் இருந்தால் அது பற்றி ரோமில் உள்ள இலங்கை தூதரகத்தின் துணைத்தூதுவர் ராணி புளத்வெலவுக்கு அறிவிக்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அரச இலச்சினையை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தரம் தாழ்ந்த செயலுக்கு எதிராக இத்தாலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக துணைத் தூதுவர் ரணி புளத்வெல தெரிவித்தார்.
 
இத்தாலியில் தங்கிருக்க நான்கு வருடங்களுக்கு குறைவான விசா அனுமதி காலத்தை கொண்டிருக்கும் இலங்கை பிரஜைகள் தமது இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை இலங்கை தூதரகத்தில் மொழிபெயர்த்து இத்தாலியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற முடியும்.
 
இந்த மொழிபெயர்ப்பையும் மிலானோ நகரில் திருட்டுத்தனமாக செய்வதாக தனக்கு கிடைத்துள்ள முறைப்பாட்டை அடுத்து அதனை தேடிப்பார்க்குமாறும் இத்தாலி பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment