Sunday, September 8, 2013

யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலையும் அவர்களின் சிந்தனையையும் அறிந்திராத மனோ கணேசன் விடுக்கும் முட்டாள்தனமான அறிக்கைகளை யாழ். மக்கள் ஏற்கமாட்டார்: மஹிந்த ஹத்துருசிங்க!

Sunday, September 08, 2013
இலங்கை::யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலையும் அவர்களின் சிந்தனையையும் அறிந்திராத மனோ கணேசன் விடுக்கும் முட்டாள்தனமான அறிக்கைகளை யாழ். மக்கள் ஏற்கமாட்டார்களென்று யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க  தெரிவித்தார்.
 
தமிழ்ப் படங்களில் வரும்வசனங்களைப் பேசி யாழ்ப்பாண மக்க ளைத் திசைதிருப்ப முடியாதெனக் கூறிய மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க, யாழ்ப்பாணத்திற்குச் சுற்றுலா வருபவர்போல் வந்து இராணுவத்தின் மீது வீண்பழி சுமத்துவதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.
 
இராணுவத்தினர் எனது தலைமையில் கட்சி அரசியல் நடத்துவதாகக் கூறுவது அபத்தமானது. எந்த வேளையிலும் மக்களையும் பாதுகாப்பவர்கள் இராணுவத்தினரே! அரச கட்டமைப்பை பாதுகாப்பதுடன் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதுதான் இராணுவத்தின் பொறுப்பு. அதுவே இராணுவத்தின் அரசியல். இதனைப் பற்றியெல்லாம் மனோ கணேசனால் புரிந்து கொள்ள முடியாது. அறிவில்லாமல் அவர் தெரிவிக்கும் கருத்துகளை யாழ். மக்கள் ஏற்கப் போவதில்லை” என்று குறிப்பிட்ட மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க,
 
யாழ்ப்பாண மக்களுக்கு அறிவுரை கூறுவதற்கு முன்னர் தனது சகோதரர்களுடன் ஒற்றுமையாக செயற்படுவதற்கு முதலில் அவர் கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.இதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட் பாளரான சி.வி. விக்னேஸ்வரன் கொழும்பு அரசியல் கண்ணாடியில் வடக்கை பார்ப்பதாகவும் மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க தெரிவித்தார். அவருடைய கருத்துகள் அவரின் கடந்த கால உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பில் ஆச்சரியப்பட வைக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment