Thursday, September 12, 2013
இலங்கை::மீண்டும் இந்த நாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்காகவும், புலிகளின் நிகழ்ச்சி நிரலை மீண்டும் நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. இதனை புறக்கணிப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடபகுதி மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டு மென சர்வமதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இலங்கை::மீண்டும் இந்த நாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்காகவும், புலிகளின் நிகழ்ச்சி நிரலை மீண்டும் நடைமுறைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது. இதனை புறக்கணிப்பதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடபகுதி மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டு மென சர்வமதத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
ஜனாதிபதியின் இணைப்பாளர்களான வணக்கத்துக்குரிய கலகம தம்மரன்சி தேரர், சர்வதேச இந்துமதபீட அமைப்பின் செயலாளர் பிரம்மஸ்ரீ இராமச்சந்திர குருக்கள் (பாபுசர்மா), வணக்கத்துக்குரிய அருட் தந்தை சரத் ஹெட்டியாராச்சி, ஹம்பாந்தோட்டை ஸ்ரீலங்கா மொஹம்மதியா சங்கத்தின் தலைவர் கலாநிதி அல்ஹாஜ் ஹசன் மெளலானா ஆகியோரே இதனைத் தெரிவித்துள்ளனர்.
நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர்கள் மேலும் கூறியதாவது;
30 வருடகால யுத்தம் முடிவடை ந்து சகல இன மக்களும் சுதந்திரமாக ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் மீண்டும் பிரி வினைவாதத்தையும் ஒற்றுமையையும் சீர்குலைக் கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசு சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியை நாடி வருகையில் நாட்டைத் துண்டாடுவதற்கும் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்கும், ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளின் உதவியை நாடுகிறது.
அபிவிருத்திக்கும் ஒற்றுமைக்கும் அரசு சர்வதேசத்தின் உதவியை நாடுவது சரியா? பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்காக ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை நாடுவது சரியா? என்பதை தீர்மானித்து மக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் வீர வசனங்களைப் பேசி தமிழ் இளைஞர் யுவதிகளை உசுப்பேத்தி புலிகள் இயக்கமொன்றை உருவாக்கியது.
புலிகள் இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டு வடக்கிலும், கிழக்கிலும் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதனை மீண்டும் குழப்பும் நோக்கத்தில் இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வீர வசனங்களைப் பேச ஆரம்பித்துள்ளனர்.
அவர்களாலேயே உருவாக்கப்பட்ட புலி தலைமைகளால் தமிழ் தலைவர்கள், புத்திஜீவிகள் பலர் கொல்லப்பட்டனர். அவற்றை மறந்து விட முடியாது.
கடந்த காலங்களை மறந்துவிடும் பழக்கம் எமது மக்களுக்கு இருக்கிறது. கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து விடுவது நல்லதுதான். ஆனால் அதனூடாக கற்றுக்கொண்ட பாடங்களை மறந்து விடக் கூடாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்...
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசு சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியை நாடி வருகையில் நாட்டைத் துண்டாடுவதற்கும் பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்கும், ஒற்றுமையை சீர்குலைப்பதற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளின் உதவியை நாடுகிறது.
அபிவிருத்திக்கும் ஒற்றுமைக்கும் அரசு சர்வதேசத்தின் உதவியை நாடுவது சரியா? பிரிவினைவாதத்தைத் தூண்டுவதற்காக ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை நாடுவது சரியா? என்பதை தீர்மானித்து மக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் வீர வசனங்களைப் பேசி தமிழ் இளைஞர் யுவதிகளை உசுப்பேத்தி புலிகள் இயக்கமொன்றை உருவாக்கியது. புலிகள் இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டு வடக்கிலும், கிழக்கிலும் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இதனை மீண்டும் குழப்பும் நோக்கத்தில் இனவாதத்தைத் தூண்டும்விதத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வீர வசனங்க ளைப் பேச ஆரம்பித்துள்ளனர். அவர்களாலேயே உருவாக்கப்பட்ட புலி தலைமைகளால் தமிழ் தலைவர்கள், புத்திஜீவிகள் பலர் கொல்லப்பட்டனர். அவற்றை மறந்துவிட முடியாது.
கடந்த காலங்களை மறந்துவிடும் பழக்கம் எமது மக்களுக்கு இருக்கிறது. கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்துவிடுவது நல்லதுதான். ஆனால் அதனூடாக கற்றுக்கொண்ட பாடங்களை மறந்துவிடக்கூடாது. இலங்கை வந்த நவநீதம் பிள்ளை அம்மையார் புலிகள் இயக்கம் ஒரு மிலேச்சத்தனமான கொலைகார இயக்கம் என்றும், புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் அதிருப்தியையும் வெளியிட்டிருந்தமையைச் சுட்டிக்காட்டிய மதத் தலைவர்கள், இதேபோன்று தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவையும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியையும் இலங்கைக்கு அழைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

No comments:
Post a Comment