Tuesday, September 10, 2013

இலங்கை சிறையில் உள்ள பாம்பன் மீனவர்கள் காவல் நீட்டிப்பு!

Tuesday, September 10, 2013
ராமேஸ்வரம்::மன்னார் கடல் பகுதியில் கடந்த மாதம் 4 விசைப்படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்த பாம்பன் பகுதி மீனவர்கள் 35 பேரை படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இந்த மீனவர்கள் அனைவரும் இலங்கை

நாகப்பட்டினம், ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 72 மீனவர்களும் ஏற்கனவே இலங்கை சிறைகளில் உள்ளனர்.செப். 21ம் தேதி இலங்கையில் வடக்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பின்னரே தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து இலங்கை கோர்ட் உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட் டம் 5வது நாளாக நேற்றும் நீடித்தது. நேற்று முதல் மண்டபம் மீனவர்களும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
நீர்கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்யக்கோரி பாம்பன் மீனவர்கள் கடந்த 15 நாட்களாக கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பாம்பன் மீனவர்கள் 35 பேரையும் நேற்று காலை புத்தளம் கோர்ட்டில் இலங்கை போலீசார் ஆஜர்படுத்தினர். மீனவர்களின் சிறை காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து வருகிற செப். 23ல் கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 35 மீனவர்களும் நீர்கொழும்பு சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.


No comments:

Post a Comment