Tuesday, September 10, 2013

தாய்லாந்தில் விமான விபத்து: 13 பயணிகள் படுகாயம்!

Tuesday, September 10, 2013
பாங்காக்::தாய்லாந்து நாட்டின் விமானம், ஓடுபாதையில்இருந்து விலகி ஓடி நின்றதால் ஏற்பட்ட விபத்தில், 13 பயணிகள் காயமடைந்தனர். தாய்லாந்து நாட்டின், "தாய்' ஏர்லைன்ஸ் விமானம், சீனாவின், குவாங்சு நகரிலிருந்து புறப்பட்டு, நேற்று முன்தினம், இரவு, பாங்காக்கில் உள்ள, சுவர்ணபூமி விமான நிலையத்தில் தரையிறங்கியது.
 
இந்த விமானத்தில், 288 பயணிகளும், 14 விமான ஊழியர்களும் இருந்தனர். விமானம் கீழே இறங்கும்போது, "லேண்டிங் கியர்' சரியாக வேலை செய்யவில்லை. இதனால், இந்த விமானம், ஓடுபாதையிலிருந்து விலகி ஓடி, மண் தரையில் சிக்கி நின்றது. இந்த விபத்தில், 13 பயணிகள் காயம் அடைந்தனர். விமானத்தின் அவசர வழியாக, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment