Tuesday, September 10, 2013
இலங்கை::இலங்கையில் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
குறிப்பாக பால் நிலை சமத்துவப் பிரச்சினை மற்றும் சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவியளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இளைஞர் வலுவூட்டல் திட்டங்களுக்கு அமெரிக்கா 22.5 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளது.
18 இளைஞர் வலுவூட்டல் திட்டங்களுக்கு இவ்வாறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்கத் தூதுவர் மிச்சல் ஜே சிசனினால் இந்த உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இளைஞர் வலுவூட்டல் திட்டங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட மிகச் சிறந்த 18 முன்மொழிவுகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மொனகராகல், ஹம்பாந்தோட்டை, மாத்தளை, அனுராதபுரம், கொழும்பு, கிளிநொச்சி, திருகோணமலை, புத்தளம், காலி, பொலனறுவை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இந்தத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

No comments:
Post a Comment