Tuesday, September 10, 2013
சென்னை::ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கைக்கு, போர்
கப்பல்கள் வழங்கப்படுகின்றன,'' என, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன
நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
டில்லியில் இருந்து நேற்று மதியம், 2:30 மணிக்கு, சென்னை வந்த அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், விமான நிலையத்தில் அளித்த பேட்டி:-
இலங்கையில் நடக்கும் காமன்வெல்த்
மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க வேண்டும் என்று, இலங்கையில் உள்ள
தமிழர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரதமர், இலங்கை வந்தால், அங்குள்ள
தமிழர்களுக்கு நன்மைகள் நடக்கும் என அவர்கள் நம்புகின்றனர். பிரதமர், காமன்வெல்த்
மாநாட்டில் பங்கேற்பது குறித்து, இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இலங்கைக்கு, போர் கப்பல்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, ஏற்கனவே செய்து
கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு; தற்போது எடுக்கப்பட்ட
முடிவு அல்ல. மத்திய அரசு வழங்கவில்லை என்றாலும், வேறு சில நாடுகள், இலங்கைக்கு
போர் கப்பல்களை வழங்க தயாராக இருக்கின்றன. குறிப்பாக, சீனா, இலங்கையுடன் நெருங்கி
பழகி வருகிறது. இலங்கைத் தமிழர்களுக்காக, மத்திய அரசு, 58 ஆயிரம் கோடி ரூபாய்
செலவில் நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
விரைவில், இலங்கையின் வடக்கு
மாகாணத்தில் தேர்தல் நடக்க உள்ளது. தற்போது இலங்கையுடன் மோதல் போக்கை கையாண்டால்,
நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போவதுடன், அங்கு வாழும் தமிழர்களுக்கான
உரிமைகளை பெற்றுத் தருவதில், சிரமம் ஏற்படும். இவ்வாறு, சுதர்சன நாச்சியப்பன்
கூறினார்.

No comments:
Post a Comment