Tuesday, September 10, 2013
இலங்கை::இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு நாட்டின் அரசியல் கள நிலைவரம் மற்றும் மாகாண சபை தேர்தல்கள், பொதுநலவாய ஏற்பாடுகள் குறித்து வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் நேற்று விளக்கமளித்தனர்.
இந்தச் சந்திப்பு நேற்றுக் காலை வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதன் போதுஅமைச்சர் பீரிஸ் இம்மாதம் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தல், பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையிலும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தாக்கப்பட்டதாக இதுவரையில் எந்தவொரு தேர்தல் வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லையென விளக்கமளித்தார்.
விருப்பு வாக்குகள் பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே கட்சிக்குள் சில பிணக்குகள் பதிவாகியிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், எதிர்க்கட்சியினர் இம்முறை பாரிய பிரசாரங்களெதுவும் முன்னெடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்கள் நீதியாகவும் வெளிப்படையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே அரசாங்கத்தின் ஒரே குறிக்கோள் அந்த வகையில், தேர்தல்களை முன்னிட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு தேர்த ல்கள் ஆணையாளர் அழைப்பு விடுத் துள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையகத்தின் முன்னாள் தலைவர் என். கோபாலசுவாமி தலைமையில் தெற்காசிய கண்காணிப்பு பிரதிநிதிகள் குழு இலங்கை வரவுள்ளது.
இதில் இந்தியாவிலிருந்து ஐந்து பேரும் பாகிஸ்தானிலிருந்து ஐந்து பேரும் பங்களாதேஷிலிருந்து மூவரும் நேபாலிருந்து இருவரும் ஆப்கானிஸ்தான், பூட்டான் ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒருவர் வீதமும் 17 பேர் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வரவிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இவர்களுக்கு மேலதிகமாக பொதுநலவாய அமைப்புக்களிலிருந்தும் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர். இக்குழுவில் கென்னியாவின் முன்னாள் பிரதித் தலைவர், அவுஸ்திரேலிய விக்டோரிய மாநிலத்தின் முன்னாள் தேர்தல் அதிகாரி, பங்களாதேஷிற்கான முன்னாள் தேர்தல் ஆணையாளர், கர்பியன் சங்கச் செயலாளர் ஆகியோர் அங்கம் வகிப்பரெனவும் விளக்கமளித்தார்.
இச்சந்திப்பில் கலந்து கொண்ட வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப் பட்டிருக்கும் சில குழப்பமான அம்சங்கள் குறித்து அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்த போதே வெளிநாட்டுக் கண்காணிப்பா ளர்களின் வருகை தொடர்பிலும் தகவல் களை வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்ப டுத்தப்படும் விதம் குறித்தும் தெளிவு படுத்தினார்.

No comments:
Post a Comment