Saturday, September 28, 2013

ராஜிவ் கொலையாளிகளைசிறையில் சந்தித்த வைகோ!

Saturday, September 28, 2013
இலங்கை::வேலூர்::வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளிகளை, வைகோ சந்தித்து பேசினார்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறையிலும், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.ம.தி.மு.க., பொது செயலாளர் வைகோ, நேற்று காலை, 10.30 மணிக்கு வேலூர் ஆண்கள் சிறைக்கு சென்று முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோரை சந்தித்து பேசினார். அவருடன் வக்கீல் நன்மாறன் சென்றார். தொடர்ந்து, பெண்கள் சிறைக்கு சென்ற வைகோ, அங்கு நளினியை சந்தித்தார்.அவர்களை சந்தித்து விட்டு திரும்பிய வைகோ கூறியதாவது:
 
முருகன், பேறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்வது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.அடுத்த மாதம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம், வேறொரு தூக்கு தண்டனையை ரத்து செய்வது குறித்த வழக்கை விசாரிக்க இருக்கிறார். இதன் மூலம் முருகன், பேரறிவாளன், சாந்தன் வழக்குகளுக்கு தீர்வு ஏற்படும்.தற்போது, இலங்கையில் நடந்த தேர்தல், இலங்கை இந்தியா கூட்டு சதியால் நடந்தது. இந்த தேர்தலில், ராஜப÷க்ஷவுக்கு எதிராக, தமிழர்கள் ஓட்டு போட்டுள்ளனர். இலங்கையில் ஜனநாயகம் இருப்பது போல, ராஜப÷க்ஷ காட்டிக் கொள்கிறார்.தமிழர் வசிக்கும் பகுதியில் இருந்து ராணுவம், போலீஸாரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தனி ஈழம் மட்டும் தான் இலங்கை பிரச்னைக்கு நிரந்திர தீர்வு.இவ்வாறு கூறினார்.ம.தி.மு.க., ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சுப்பிரமணி, மாவட்ட செயலாளர் உதயகுமார், நகர செயலாளர் பழனி, கவுன்சிலர்கள் சேகர், சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment