Saturday, September 28, 2013

தேர்தல் முடிவுகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலும்: அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க!

Saturday, September 28, 2013
இலங்கை::தேர்தல் முடிவுகள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வழிகோலும் என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.
 
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டியமை இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
 
நீண்ட கால யுத்தத்தின் பின்னர் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடாத்தப்பட்டுளதாகத் தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இலக்காக அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சர்வதேச அழுத்தங்கள் காரணமாக மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment