Saturday, September 28, 2013
இலங்கை::காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ள உலக நாடுகளின் ஒத்துஐழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும் என வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியிட்டிய (புலி)கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்குவதனை அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தினால், கடுமையான அணுகுமுறைகளை பின்பற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு அமைவாக நிறைவேற்றப்பட்ட 13ம் திருத்தச் சட்டத்தில் காணி காவல்துறை அதிகாரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அரசாங்கம் காணி காவல்துறை அதிகாரங்களை வழங்கத் தவறினால் உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் அவற்றைப் பெற்றுக்கொள்ள நேரிடும் என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment