Sunday, September 22, 2013
சிவகங்கை::இலங்கையின் வடக்கு பகுதியில் நடந்த தேர்தல் மூலம், தமிழர்களுக்கு
அரசியலில், முழு அதிகாரம் கிடைக்கும்,'' என, மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்
தெரிவித்தார்.
இலங்கை, அரசியல் சாசனப்படி, ராஜிவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தப்படி, 25
ஆண்டுகளுக்கு பின், இலங்கை வடக்கு பகுதியில், தேர்தல் நடக்கிறது. இதன் மூலம்,
இலங்கையில் தமிழர்கள் 37 பேருக்கு, அரசியல் அதிகாரம் கிடைக்கும். தமிழர்கள்
வசிக்கும் பகுதியில் வீடு, நிலங்களை இழந்தவர்களுக்கு, மீண்டும் அவை கிடைக்கும்.
தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், நேர்மையாக தேர்தல் நடத்திய, இலங்கை
அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன், என்றார்.

No comments:
Post a Comment