Sunday, September 8, 2013

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் விளக்கம் திருப்தி அளிப்பதாக இலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது!


Sunday, September 08, 2013
இலங்கை::பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் விளக்கம் திருப்தி அளிப்பதாக இலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.
 
முஸ்லிம் கடும்போக்குவாதம் குறித்து அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கருத்து வெளியிட்டிருந்தார். இது தொடர்பில் முஸ்லிம் பேரவை மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அதன் பின்னர் பாதுகாப்புச் செயலாளர் தமது கருத்து குறித்து விளக்கமளித்திருந்தார்.
 
இலங்கை வாழ் முஸ்லிம்களை இழிவுபடுத்தவில்லை எனவும் புறச் சக்திகளினால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் குறித்து எச்சரிக்கை விடுத்ததாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்திருந்தார். பாதுகாப்புச் செயலாளரின் இந்த விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், இந்த விளக்கத்தை வரவேற்பதாகவும் இலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது.
 
சமாதானத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பை புரிந்து கொண்டமை மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம் தொடர்ந்தும் நாட்டின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பாடுவார்கள் என முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது. அண்மைக் காலமாக முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய சவால்களின் போது பாதுகாப்புச் செயலாளர் வழங்கிய ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது,

No comments:

Post a Comment