Sunday, September 08, 2013
இலங்கை::உயர்மட்ட இந்திய பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஒக்ரோபர் மாத ஆரம்பத்தில் இந்திய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
எதிர்வரும் நவம்பவர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பாரா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுப்பதற்கு முன்னதாக, இந்திய உயர்மட்டப் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
அண்மையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்த போது, இந்திய பிரதிநிதிகளின் இந்த விஜயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஸ்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
இந்த விஜயத்தின் பின்னர் பிரதமர் மன் மோகன் சிங் அமர்வுகளின் பங்கேற்பாரா இல்லையா என்பது பற்றி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment