Sunday, September 08, 2013
இலங்கை::உயர்பாதுகாப்பு வலயத்தில் விமானத்தளம் மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்கான காணிகளை தவிர ஏனைய காணிகள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐ.ம.சு.முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:-
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த மாகாணசபை ஆட்சி அதிகாரத்தை உங்களிடம் தருவதற்கு தயாராகவிருக்கின்றார். இந்நிலையில் இந்த ஆட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் போனால் என்ன நடக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
வடமாகாண மக்களுக்கான கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட ஏனைய பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த சிந்தனையூடாக தெளிவாக கூறியுள்ளார்.
இதனிடையே உயர்பாதுகாப்பு வலயப் பகுதியிலுள்ள பொதுமக்களின் காணிகளில் பலாலி விமானத்தள விஸ்தரிப்பு மற்றும் துறைமுக விஸ்தரிப்புக்கான காணிகளை தவிர ஏனைய பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாக மக்களிடம் நிச்சயம் நாம் கையளிப்போம்.
அத்துடன் விஸ்தரிப்பின் போது பெறப்படும் காணிகளுக்கேற்ற பெறுமதியை அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படுமெனவும் வடமாகாணத்திலுள்ள காணிகளை அரசு பறிக்கின்றது என்று சிலர் கூறிவரும் நிலையில் இக்காணிகள் வடமாகாணத்தில் இந்திய அமைதிப்படையிருந்த போது எடுத்த காணிகள் என்பதுடன் நாம் அவற்றை படிப்படியாக மக்களிடம் மீண்டும் கையளித்து வருகின்றோம். நாம் தமிழ் மக்களின் காணிகளை ஒரு அங்குலமேனும் எடுத்தது இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பற்றி நீங்கள் நன்கறிவீர்கள். இங்குள்ள பத்திரிகைகள் மக்களுக்கு உண்மையான செய்திகளை வெளியிடுவதில்லை. இந்நிலையில் குறித்த பத்திரிகை நிறுவனங்கள் ஒருபக்க செய்திகளை வெளியிடாமல் எங்களுடைய கருத்துக்களும் மக்களுக்கு சென்றடையும் வகையில் குறித்த பத்திரிகை நிறுவனங்கள் தமது பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டும்.
இந்நிலையில், சர்வதேச சமூகமும், சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் மட்டுமல்லாது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கடந்த நான்கு வருடகாலமாக வடமாகாணத்தில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
இதனிடையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முதலமைச்சர் வேட்பாளர் வடமாகாணத்தைச் சேர்ந்தவரா?.. எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் வடமாகாணத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவில்லையென்றும், நான் பலமுறை இங்கு வருகைதந்துள்ள போதிலும் முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக ஒரேயொருமுறை இங்கு வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் எமது மக்களின் வாழ்வு அழிக்கப்பட்ட போதிலும், இழக்கப்பட்ட போதிலும் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பணியாற்றியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்றும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை பொலிஸ் படையில் இணைப்பதற்கான நடவடிக்கை!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை பொலிஸ் படையில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார்' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அது மாத்திரமன்றி தமிழ் இளைஞர், யுவதிகளை அரச படையிலும் இணைத்துள்ளோம். இன்று வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என்று எவரும் இல்லை. அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன' என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:-
வடமாகாண மக்களுக்கு அதிகாரத்தினை கொடுக்க அரசிடம் கேட்பவர்கள் இந்த நாட்டில் நிலவும் சமாதானத்தினை பெற்றுகொடுக்க ஏன் முனையவில்லை?
அரசாங்கம் வடமாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை பறிக்கின்றது என சிலர் கூறுகின்றனர்.
வடமாகாணத்தில் இந்திய சமாதானப்படை இருந்த போது எடுத்த காணிகளைதான் எமது அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக
மீண்டும் கையளிக்கின்றார்களே தவிர, அரசாங்கம் தமிழ் மக்களின் நிலங்களில் ஒரு அங்குலத்தினை கூட எடுக்கவில்லை.
உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணியில் பலாலி விமானத்தள விஸ்தரிப்பு மற்றும் துறைமுக விஸ்தரிப்பிற்கான காணிகளை தவிர ஏனைய காணிகள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.
தாங்கள் ஆட்சி அமைத்தால், பொலிஸ் அதிகாரத்தினை பெற்றுக்கொடுப்போம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறி வருகின்றார்கள். ஆனால், ஏற்கனவே ஜனாதிபதி தமிழ் இளைஞர்கள் 5 ஆயிரம் பேரை பொலிஸ் படையில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார் என்பதனை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
அது மாத்திரமல்ல தமிழ் இளைஞர், யுவதிகளை அரச படையில் இணைத்துள்ளோம். இன்று வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் என்று எவரும் இல்லை. அனைத்து பட்டதாரிகளுக்கும் வேலைகள் வழங்கப்பட்டுள்ளன.
வடமாகாண மக்கள் நன்றியுடையவர்கள். அந்த வகையில், எதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் சரியானவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது' என்றார்.

.jpg)

No comments:
Post a Comment